ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..

இராமநாதபுரத்தில் 30-08-2017 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள பெரிய மரம் வேரோடு சாய்ந்து, பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் பல மணி நேரம் போராடி விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.