இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதுப்பித்திட சலுகை வாய்ப்பு..

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 2011-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2015-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களது பதிவினை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தங்களது பதிவினை புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். இச்சிறப்பு புதுப்பித்தல் சலுகை 22.08.2017 முதல் 21.11.2017 வரை நடைமுறையில் இருக்கும்.

எனவே இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 2011-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2015-ஆம் ஆண்டு வரை பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.