இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் களஆய்வு…

​இராமநாதபுரம் மாவட்டம்ää கீழக்கரை வட்டம்ää ஏர்வாடி பகுதியில் இன்று (31.08.2017) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் நேரடியாகச் சென்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கள ஆய்வு செய்தார்.

​கீழக்கரை வட்டம் ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகவும், அவர்தம் மறுவாழ்வுக்காகவும் தமிழ்நாடு அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமிருந்து பல்வேறு மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல பயிற்சிகள் பெற்று குணமடைந்து வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறும் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல பயிற்சிகளோடு கூடைப்பின்னுதல், கடல்சிப்பிகளைக் கொண்டு வீட்டு அலங்காரப் பொருள்கள் தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

​இம்மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் நபர்களின் நலனுக்காக ரூ.3.75 இலட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அலகு அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இம்மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார். சிகிச்சை பெற்று வரும் மனநல நபர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடத்தில் அறிவுரை வழங்கினார்.

​அதனைத் தொடர்ந்து ஏர்வாடியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி மற்றும் அடஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் மாணவர்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்து உணவுப் பொருள்களின் இருப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரம் மற்றும் பல்வேறு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

​இதுதவிர ஏர்வாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ,மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையிலும்,மாணாக்கர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஸ்மார்ட் வகுப்பினைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை குறித்து கேட்டறிந்தார்.

​மேலும் எதிர்வரும் மழைக்காலத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடம் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், அத்தகைய அவசர கால சூழ்நிலையின் போது பொதுமக்களைப் பாதுகாப்பான முறையில் தங்க வைத்திட ஏதுவாக ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி வகுப்பறை கட்டமைப்புடனும், அடஞ்சேரி கிராமத்தில் சமுதாய நலக்கூட கட்டமைப்புடனும் இரண்டு அவசர கால பல்நோக்கு கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பல்நோக்கு கட்டிடங்களின் நிலை குறித்தும், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்தார்.


​இந்த ஆய்வுகளின் போது இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) தஜி.முத்துசாமி, கீழக்கரை வட்டாட்சியர் இளங்கோ, மனநல மருத்துவர் மரு.பெரியார் லெனின் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image