Home செய்திகள் கீழக்கரை கடற்கரையில் மீனவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், சமாதான பேச்சு வார்த்தை…

கீழக்கரை கடற்கரையில் மீனவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், சமாதான பேச்சு வார்த்தை…

by ஆசிரியர்

கீழக்கரை மீனவர்கள் இன்று (28-08-2017) காலை வனத்துறையினரை கண்டித்து மீனவர்கள் பலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை கடலுக்கு செல்பவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், விதிகளை மீறியதாக கூறி காயப்போடும் வலைகளை சேதப்படுத்தி, ஆயிரக் கணக்கில் அபராதம் விதித்து வருவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில காலமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தீவுப் பகுதிகளில் கடல் பாசி எடுப்பதை தடுக்கும் வனத்துறையினரைக் கண்டித்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கீழக்கரை கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வன அதிகாரிகள் கூடுதல் கெடுபிடிகளை விதித்து மீனவர்களை பெரும் அவதிப்பட வைக்கிறார் என குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதேபோல் பெண்களையும் ஆபாச வர்த்தைகளால் திட்டுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பின்னர் மீனவர்கள் வனசரக அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் மீனவர்கள் சார்பாக முதலமைச்சர், மீன் வள அமைச்சகம் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு புகார் மற்றும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!