பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி!

தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரட்டையூரணி அரசு மேல் நிலைப்பள்ளி இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். குமரகுருபரன் தலைமை தாங்கினார். மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். முத்துக்குமார் மற்றும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பர நாதன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மலேரியா அலுவலர் உதயக்குமார் மற்றும் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர். மீனாட்சி சுந்தரம் அவர்கள் விளக்கவுரை அளித்தனர். டெங்கு விழிப்புணர்வைப் பற்றிய பள்ளி மாணவர்கள் நடத்திய நாடகம்,பேச்சுப் போட்டி, பாடல் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாமரைக்குளம் அரசு மருத்துவர் டாக்டர். ஸ்டெபனோ ஜோனாத்தன் மற்றும் மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் அவர்கள் பங்கு பெற்றனர். தாமரைக்குளம் சுகாதார ஆய்வாளர் கோபிநாத் வரவேற்று பேசினார்.

புதுவலசை சுகாதார ஆய்வாளர் கேசவமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார செவிலியர்கள்,பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் ஊர்த்தலைவர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..