இராமநாதபுரம் பார்த்திபனூர் அரசு பள்ளயில் காவல்துறை ஆய்வாளர் நல்லொழுக்க அறிவுரை…

தமிழகத்தில் சமீப காலமாக மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் சச்சரவுகள் அதிகமாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு நல்லொழுக்கம் பற்றிய அறிவுரைகளை பார்த்திபனூர் காவல்துறை ஆய்வாளர் ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.

ஆய்வாளர், அக்கூட்டத்தில் கீழ்கண்ட விசயங்களை வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

  • ஜாதி, மத அடையாளங்களை காட்டும் ஆபரணங்கள் அணிய வேண்டாம்.
  • ஜாதி, மத, இன பேதங்களை நண்பர்கள் மத்தியில் காட்ட வேண்டாம்.
  • பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள் மத்தியில் சுமூகமான உறவு நிலவ ஒத்துழைக்க வேண்டும்.

இதுபோன்ற முயற்சியை ஒவ்வொரு பகுதியில் உள்ள காவல்துறை எடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கமும், விழிப்புணர்வும் ஏற்படும்.