தூய்மை சாலையான கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை.. என்றும் இப்பணி தொடர வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு..

கீழக்கரையின் பிரதான சாலையாகும் வள்ளல் சீதக்காதி சாலை. ஆனால் சமீப காலமாக சாலைகளில் கொட்டப்பட்ட மணல் மற்றும் பல குப்பைகளால் அசுத்தமான சூழ்நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும் பொழுது தூசி மற்றும் புழுதி காற்றால் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இன்று காலை நகராட்சி ஆணையாளர் வசந்தி தலைமையிலும், முதன்மை அதிகாரி சந்திரசேகர், ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் மனோகரன் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் வள்ளல் சீதக்காதி சாலையை முழுமையாக சுத்தப்படுத்தினர்.

இந்தப்பணியை ஒரு நாளுடன் நிறுத்தி விடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக உள்ளது. சாலையில் மணல் கொட்டுவது சம்பந்தமாக நம் இணையதளத்தில் பல முறை செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களைப் பற்றி கவலை கொள்ளாத கட்டிட நிறுவனங்கள் ..