அதிமுக இரு அணிகள் இணைப்பு, கீழக்கரையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் போர் கொடி தூக்கினார். அதைத் தொடர்ந்து கட்சி இரண்டு அணியாக உடைந்தது. அதைத் தொடர்ந்து பல அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்றது.

இன்று (21-08-2017) தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப என்ற காரணத்துடன் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணி ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்தனர். ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக கீழக்கரையில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கீழக்கரை அஇஅதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்னாள் நகர் செயலாளர் இம்பாலா முகம்மது உசேன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஜகுபர் உசேன், தகவல் தொழில் நுட்ப பிரிவு சிவா, மார்க்கெட் ஜகுபர், நெய்னா, சேகர், இம்பாலா ஜமால் மேலும் பலர் கலந்து கொண்டனர்.


Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image