71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் TNTJ சார்பாக நடைபெற்ற குருதி கொடை முகாம்

71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரியாத் மண்டலம் சார்பாக இந்த வருட ஹஜ் பயணிகளில் அவசர கால இரத்த தேவைப்படுவோருக்காக இரத்ததான முகாம் நேற்று முன் தினம் 18-08-2017 வெள்ளிக்கிழமை KFMC – கிங் ஃபஹத் மொடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை நடைபெற்றது. இந்த முகாமில் 350 பேர் கலந்து கொண்டு, உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை காரணமாக 271 பேர் இரத்தம் கொடை அளித்தனர். மேலும் கடந்த வாரங்களில் நடந்த மொபைல் முகாம்களையும் சேர்த்து ரியாத் மண்டலம் சார்பாக மட்டும் ஹஜ் பயணிகளுக்காக 344 யூனிட் (சுமார் 120.4 லிட்டர்கள்) இரத்ததானம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சசியினை ரியாத் மண்டல நிர்வாகம் சார்பாக மண்டல மருத்துவ அணிச்செயலாளர் சகோதரர் ரைசுல் கமால் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மறுமையின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்காகவும், குருதி கொடை வழங்கிய கிளை நிர்வாகிகள், தொண்டரணி சகோதரர்கள் அனைவருக்கும் சகோதரர் ரைசுல் கமால் நன்றி தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.