தமிழ் தஃவா மற்றும் தமுமுக சார்பாக ரியாதில் இலவச மருத்துவ முகாம்…

சவுதி அரேபியா ரியாதில் தமிழ் தஃவா மற்றும் தமுமுக மத்திய மண்டலம் மற்றும்  அல் ராயன் மருத்துவமனை இணைந்து 18-08-2017 அன்று இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் அல் ராயன் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாம் இரண்டு அமர்வாக நடைபெற்றது. முதல் அமர்வில் அல் ராயன் மருத்துவர் ஷாகீர் அவர்கள் மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொண்டனர் . அதனைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.  இந்நிகழ்வில் நீரிழிவு பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இம்முகாமில் பல பகுதியிலிருந்து மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.