கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்கு சென்னையைச் சேர்ந்த மகேந்திரா ப்ரைடு ஸ்கூல் (Mahindra Pride School) என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆனந்தி அரவிந்த் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபு குழுவினர் இறுதியாண்டு பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளுதல் தன்நம்பிக்கை வளர்த்துகொள்ளுதல், இலக்கு நிர்னயத்தல், ஆளுமைதிறன், பேச்சுத்திறன் வளர்த்தல், தனிநபர் பழக்கவழக்கங்கள் போன்ற பல பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன.

இதில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், அமைப்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கப்பல்துறை மற்றும் கனிணித்துறை (MECHANICAL, CIVIL, EEE, ECE, MARINE & CT ) மாணவர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.

​இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்க்குரிய எல்லா ஏற்பாடுகளையும் சென்னை மகேந்திரா ப்ரைடு ஸ்கூல்(Mahindra Pride School) நிறுவனத்தினர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.அ.அலாவுதீன், துணைமுதல்வர் இராஜேந்திரன், சேக்தாவூது, துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.


புனித ரமலான் வாழ்த்துக்கள்..