சுதந்திர தினத்தை முன்னிட்டு TNTJ மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்

இந்தியாவின் 71 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கீழக்கரை அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கிளைத்தலைவர் பசீர்அஹமது தலைமையில், தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர் DSP பாலாஜி துவக்கிவைத்தார். இதில் மாற்று சமுதாய சகோதரர்கள் உள்பட 70 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இரத்தம் வழங்கும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆண்களும்,பெண்களுமாக சேர்ந்து சுமார் 31 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள். இறுதியாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நசுருதீன் நன்றியுரையுடன் நிறைவடைந்தது. தற்சமயம் டெங்கு போன்ற கிருமி காய்ச்சல்களால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் இரத்த தேவை அதிகமாக இருப்பதினால் இது போன்ற முகாம்களின் மூலமாக இரத்தம் தானம் பெறப்பட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கு ஏதுவாக அமைகிறது.