இராமநாதபுரம் மாவட்டத்தில் 71வது சுதந்திர தின விழா…

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதையொட்டி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதுபோல் கீழக்கரை நகராட்சியில் ஆணையர் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை, திருப்புல்லாணி, கும்பிடுமதுரை, ஏர்வாடி மற்றும் பல இடங்களில் உள்ள பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர விழா கொண்டாடப்பட்டது. கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி, தீனியா மெட்ரிக் பள்ளி, இஸ்லாமியா பள்ளி, அல் பயின்ற பள்ளி, கண்ணாடி வாப்பா பள்ளியிலும் சுதந்திர தின விழா கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரி, முகம்மது சதக் கல்லூரி, தாசிம் பீவி அப்துல்காதர் கலைக் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். சுமையா தாவூது  மற்றும்  முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.ஜே.அப்பாஸ் ஆகியோருக்கு  உயர்கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன்  சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கீழக்கரையில் SDPI கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்பான SDTU சார்பாகவும் கீழக்கரை பஜார் பகுதியில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..