கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி

கீழக்கரை கிழக்கு தெரு அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியினை ஏற்றி விழாவினை சிறப்பித்தார். கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி கலந்து கொண்டு சுகாதாரத்தின் அவசியம் குறித்து பேசினார்.

முன்னதாக பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர்.ஜாபிர் சுலைமான் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் பாசில் அக்ரம் தொகுத்து வழங்கினார். பள்ளியின் நிர்வாக அதிகாரி முஹம்மது பைசல் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பள்ளியில் ஓவிய கண்காட்சியும், மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டியும் நடைபெற்றது.