*இராமேஸ்வரம் சென்னை இரயிலில் கல்வீச்சு*

இன்று (13-08-2017) இராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு இரயிலில் கல் வீசப்பட்டது.  விரைவு ரெயில் பரமக்குடி ஸ்டேஷன் தாண்டிய ஒரு சில வினாடிகளில் பயங்கர சப்தத்துடன் கல் வீசப்பட்டு S6 பெட்டியில் வந்து விழுந்தது.  அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பயணசீட்டு பரிசோதகரிடம் கேட்டப்போது அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை சிலரை கைது செய்துள்ளார்கள் என்றும் கூறினார் .