கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு-வெள்ளி விழா கொண்டாட்டம்…

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 1989-1992ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் 25ஆண்டு வெள்ளிவிழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்.டாக்டர்.அலாவுதீன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணைமுதல்வர் சேக்தாவுது, முன்னாள் துணைமுதல்வர்கள் நவநீதராஜன், கமால்அப்துல்நாசர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப்பேசினர்.

இவ்விழாவில் முன்னாள் மாணவர்அப்தாஹிர் அலி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் மலரும் நினைவுகளையும் கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

மேலும் இக்கல்லூரியில் பயின்ற இந்த மாணவர்கள் பலர் தொழிலதிபர்களாகவும், அரசு வேலையில் பணிபுரிபவர்களாகவும் வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர் என்பது கலந்துரையாடல் மூலம் எடுத்துரைத்தனர். இது தற்பொழுது பயிலும் மாணவர்களுக்கு முன் உதராணமாக இருந்தது. இதில் 1989-1992 மாணவர்கள் தாங்கள் துவக்கிய முகில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து குறும்படம் மூலம் எடுத்துரைத்தனர்.


​இதில் முதலாம் ஆண்டு துறைத்தலைவர் டாக்டர்.யோசுவா, மரியதாஸ், நாகராஜன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் அக்பர்அலிராஜா, பொருளாளர் முகம்மது நசிர்தீன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் 1989-1992ல் பயின்ற மாணவர்கள் குடும்பத்துடன் ஆசிரியர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கோபால் என்ற இராஜாராம் பாண்டியன் மற்றும் நாகூர் மைதீன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முகில் அறக்கட்டளை தலைவர் நாகூர் மைதீன் மற்றும் முன்னாள் மாணவர்கள் இராம்குமார், மணிகன்டன், மகேஷ் கண்ணன், சுகுமார், கோபால கிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் MSPC முன்னாள் மாணவர்கள் அமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவர் குமாரவடிவேல் நன்றியுரையாற்றினார்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.