கீழக்கரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மணிகண்டன் திடீர் ஆய்வு

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் மருத்துவமனையில் உள் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை விபரங்கள், மருத்துவ வசதிகள், மருத்துவர் கவனிப்பு உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆய்வு செய்து சுகாதாரம், மருந்து இருப்புகள், மருத்துவ கண்காணிப்பு வசதிகள், அவசர சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். அமைச்சருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக கீழக்கரை கலங்கரை விலக்கம் கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் வருகையால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.