இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்…

இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று (12-08-2017, சனிக்கிழமை) இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமை கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் திலகவதி துவக்கி வைத்தார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் MMK.இபுராஹிம் தலைமை தாங்கினார். மேலும் இம்முகாமின் துவக்க விழாவிற்கு தெற்கு தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியா பள்ளி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நாடார் உறவின்முறை கிருஷ்ணமூர்த்தி, தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் செய்யது இப்ராகிம் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

இம்முகாமில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்நு கொண்டனர். 300 .மேற்பட்ட மக்கள் பரிசோதனை செய்தனர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் திருமதி மெர்ஸி தலைமையில் மருத்துவ குழு பரிசோதனை செய்தனர் பலருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது மேலும் பெண்களுக்காக பிரத்யேக பெண் மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். இம்முகாம் இன்று (12-08-2017) மாலை 05.00 மணி வரை நடைபெறும்.