கீழக்கரையில் பெய்த மழை மனதுக்கு இதமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு பயத்தை உண்டாக்குகிறது…

கீழக்கரையில் நேற்று பலமான மழை பெய்து, ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது, ஆனால் வீதியெங்கும் தேங்கி கிடக்கும் மழை நீரும், வாறுகால்கள் அடைத்து வழிந்தோடும் சாக்கடை நீரும் தொற்றுநோய் பரவக் கூடிய பயத்தை உருவாக்குகிறது.

கீழக்கரையில் பெய்த மழை மனதுக்கு இதமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு பயத்தை உண்டாக்குகிறது… தேங்கி கிடக்கும் நீரால்தான் டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவுகின்றன என்ற பிரச்சாரம் செய்து வரும் வேலையில் நகராட்சி நிர்வாகம், மழை காலங்களில் இது போன்று ஏற்படும் பிரச்சினைகளை போர்கால அடிப்படையில் சரி செய்ய முன் வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தொற்றுநோய்களில் இருந்த மக்களை காப்பாற்ற முடியும்.