விளையாட்டில் தொடர்ந்து சாதனை படைக்கும் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள்…

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றனர். இவ்வாரம் நடந்த வட்டு எறிதல் போட்டியில் ஆகிப் ரஹ்மான் முதலிடமும், தடை தாண்டி ஓடுதலில் இன்சாப் முதலிடம், உயரம் தாண்டுதலில் இர்பான் இரண்டாம் இடமும் பிடித்தனர். அதே போல் இறகு பந்து ஒற்றையர் பிரிவில் பாத்திமா ஷப்னா முதலிடமும், இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இஸ்லாமியா பள்ளி கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கி வருவது மிகவும் ஆரோக்கியமான விசயமாகும்.


Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered