பல நாள் ஏங்கிய கீழக்கரை மக்களுக்கு மனதுக்கு இதமாக மழை பொழிய துவங்கியுள்ளது ..

கீழக்கரையில் எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கிணறுகளும் வற்ற தொடங்கியது. மழைக்காக பல இடங்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

இன்று அனைவருடைய மனதும் குளிரும் வகையில் மழை பொழிய தொடங்கியுள்ளது. இது தொடர் மழையாக பெய்து நீர் வளம் பெருகினால் மக்கள் மனம் குளிரும்.