பாஸ் இருக்கு, பஸ் இல்லை, படிக்க வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் குடும்பத்துடன் போராட்டம் அறிவிப்பு…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இங்கு பணிபுரியும் உப்பள தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அரசு போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

ஆனால் தினமும் பஸ் வருவதில்லை, அவ்வாறு வந்தாலும் சரியான நேரத்திற்கு பஸ் வருவதில்லை. முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்களின் படிப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 10/08/2017 (வியாழன்) அன்று பஸ் வசதி ஏற்படுத்திதர அரசை வலியுறுத்தி காலை 7.00 மணிக்கு சேரந்தை கிராமத்திலிருந்து ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளிவரை (சுமார் 13கிலோமீட்டர்) நடந்து சென்று பள்ளியில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று பெற்றோர்கள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் மாலை 5.00 மணிக்குள் பஸ் போக்குவரத்துக்கு தீர்வு எட்டவில்லையென்றால் குடும்பத்தோடு பள்ளியிலேயே சமைத்து சாப்பிட்டு தங்கும் போராட்டம் துவங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர் தலைவர் K.பச்சமால் வெளியிட்டுள்ளார்.


புனித ரமலான் வாழ்த்துக்கள்..