ஒன்றுக்கு மேல் பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அபராதம்.

இந்தியாவில் தொழில் தொடங்கவும், பண பரிவர்த்தனை போன்ற காரியங்களுக்கு பான் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது பான் கார்டு எடுப்பதற்காக விண்ணப்பங்கள் குவிந்து வரும் நிலையில் நாடு முழுவதும் 11,44,211 லட்சம் போலி பான் கார்டு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்க்வார் ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதே பொது விதி என்பதால் உடணடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவ்வாறு வைத்திருப்பவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வருமான வரி சட்டம்-1961, 272 பிரிவு-பி வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

இந்நிலையில் பான் கார்டு பயன்பாட்டில் உள்ளதா? அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள அரசின் இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.