இஸ்லாமியா பள்ளி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்…

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமை (12-08-2017) அன்று தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை முகாம் நடத்துகிறது.

இம்முகாமை கீழக்கரை துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி துவக்கி வைக்கிறார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் MMK.இபராஹிம் தலைமை தாங்குகிறார்.

இம்முகாமில் கண்புரை, விழித்திரை விலகல், கண் கருவிழி மாற்று, கண் நீர் அழுத்த நோய் மற்றும் பிற நோய்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் இலவச சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் பெண்களுக்கு பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..