ஆடி தள்ளுபடி என்ற பெயரில் விலையில் மோசடி செய்யும் துணிக்கடைகள்..

ஆடி மாதம் என்றால் ராசி இல்லாத மாதம், வியாபாரமே நடக்காது என்ற நிலைமை மாறி மக்களின் இலவச மாயையினால் இன்று வியாபாரம் கொழிக்கும் மாதமாக மாறி விட்டது இந்த “ஆடி” மாதம்.

இப்போதெல்லாம் ஆடி மாதம் வந்துவிட்டால் “தள்ளுபடி” என்ற சொல் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது, அந்த அளவுக்கு வியாபாரிகள் மக்களை இலவசத்துக்கு அடிமைபடுத்தியுள்ளார்கள். இந்த ஆடி மாதத்தில் தான் எல்லா துணிக்கடைகளில் பாதிக்கு பாதி அதாவது 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்து பழைய பொருட்களை பாதி விலை என்ற பெயரில் விற்காத பொருளையும் விற்றுவிடுவார்கள்.  இந்த சந்தர்ப்பத்தை வாடிக்கையாளர்களும் லாபம் என்ற எண்ணத்தில் பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வருடம் முழுவதும் தள்ளுபடி இருந்து வந்தாலும் அடி தள்ளுபடிக்கு உள்ள மவுசு இன்னமும் குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தள்ளுபடி என்ற பெயரில் சில கடைகளில் தில்லு முல்லுகளும் நடைபெறுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளது. அதை பற்றிய வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

மக்களை ஏமாற்றும் நோக்கில் தள்ளுபடி என்ற பெயரில் விலையை உயர்த்தி 50% தள்ளுபடி என்று விற்பனை செய்து வருகின்றனர். அதாவது உண்மையான விலை ரூபாய்.750/-பதிலாக ரூபாய்.1200/-என்று புதிதாக ஒரு ஸ்டிக்கரை ஒட்டி அதிலிருந்து 50% தள்ளுபடி செய்து ரூபாய்.600/-என்று விற்பனை செய்து வருவது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தள்ளுபடியை உண்மை என்று நம்பும் வடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற மோசடிகள் பிரம்மாணடமான துணிக்கடைகளில் அதிக அளவில் நடக்கிறது என்றும் பிராண்ட் துணிகளில் தள்ளுபடி மோசடி நடப்பது குறைவு என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். “ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் நபர்கள் ஏமாற்றி கொண்டுதான் இருப்பார்கள்” என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image