கீழக்கரைக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சமூக சேவகர் கோரிக்கை…

கீழக்கரைக்கு குடி தண்ணீர் காவிரி குடி நீர் திட்டம் மூலம் குழாய் மூலமாக வருகிறது. ஆனால் இராமநாதபுரம் மற்றும் கீழக்கரைக்கு இடைபட்ட வழியில் பல கிராமத்து மக்களால் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

மேலும் சில இடங்களில் கேட் வால்வுகள் உடைக்கப்பட்டும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் கீழக்கரைக்கு வரும் தண்ணீர் தடைபடுவதுடன், பல கழிவுகள் கலந்து அசுத்த நீராக கீழக்கரை நகருக்கு வந்தடைகிறது.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சித்தீக் அம்மா அழைப்பு மையம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.