Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நவீன இயந்திரத்துக்கு அடிமையாக்கப்படும் மனிதர்கள்..

நவீன இயந்திரத்துக்கு அடிமையாக்கப்படும் மனிதர்கள்..

by ஆசிரியர்

நவீன உலகத்தில் தனி மனிதன் சுதந்திரம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. ஒரு மனிதனின் ஓவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் கண்கானிக்கப்பட்டுதான் வருகிறது. சமீபத்தில் அமெரிக்கவில் உள்ள விஸ்கோன்சின் (Wisconsin) என்ற நிறுவனத்தில் அரிசி வடிவிலான நுண்ணிய கருவியை (Micro Chip) ஊழியர்களின் கைகளுக்குள் பொறுத்தப்படுகிறது. அது அலுவலகத்துக்குள் செல்லவும், பல வகையான சேவைகளை பெறவும் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பொதுவாக ஊழியர்கள் அலுவலகத்தில் நுழைவதற்கு இயந்திரத்தில் விரல் ரேகையை பதிவு செய்து விட்டு உள்ளே நுழைவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கைகளுக்குள் மைக்ரோ சிப்பை (Micro Chip) பொருத்தப்பட்டு அதன் மூலம் எளிதில் பல வகையான சேவைகளை பெறுவதற்கு இந்த புதிய முறை நடைமுறையில் உள்ளது.

மேலும் இந்த சிப் மூலம் அலுவலகம் உள்ளே செல்லவும்,கணினியை (Sign In ) இயக்கவும், பொருள் வழங்கும் இயந்திரம் மூலம் பொருட்களை பெறவும், கைகளுக்குள் செலுத்தப்பட்ட இந்த மைக்ரோ சிப் உதவியாக உள்ளது. இது ஒரு அறிவியல் வளர்ச்சியின் அடுத்த மைல்கற்கள் என்றே சொல்கிறாரகள்.

அதே சமயத்தில் இது போன்ற புதிய முயற்சி இயற்கைக்கு மாறாக இருக்கிறது என்ற கருத்து நிலவினாலும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விருப்பத்தோடு தான் ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் உடன்பாடு இல்லாத ஊழியர்களுக்கு அந்நிறுவனம் நிர்பந்தம் கொடுப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிற் காலத்தில் அவ்வாறு செய்யாதவர்கள் வேலையை இழக்கும் நிலைமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு செய்வதனால் ஒருவரின் அந்தரங்கம், ஆரோக்கியம் மற்றும் முதலாளி – ஊழியர் உறவுகள் பாதிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் மத்தியில் கருத்து கேட்பு மற்றும் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் அதை விளம்பரம் செய்யும் வகையில் எனக்கு சிப் பெருத்தப்பட்டுள்ளது என்ற வாசங்களோடு விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[huge_it_video_player id=”3″]

நிஜ வாழ்கையில் கைகளுக்குள் சிப் என்றதும் நம் நினைவுக்கு நாவலில் படித்த கதை தான் வருகிறது.


TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!