கீழக்கரை நகரின் சுகாதாரத்தை பேண நகராட்சி அதிரடி நடவடிக்கை..

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகம் எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்தாலும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமையாலும், அத்யாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காத காரணங்களால் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக சுகாதார பணிகளுக்கு ஓத்துழைக்காத வீட்டினர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை அபராதத்துடன் எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இனிமேலாவது நகராட்சிக்கு முழுமையான ஓத்துழைப்பு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.