கீழக்கரை ஜும்ஆ பள்ளியில் ஹாஜிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி..

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வதாகும். ஓவ்வொரு இஸ்லாமியனும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருப்பார்கள். அவ்வகையில் இந்த வருடத்திற்கான ஹஜ் கடமை நினைவேற்ற இன்னும் 25நாட்களே உள்ளது. வாழ்கையில் முக்கியமான கடமையை தூதர் அவர்களின் வழிமுறையில் முழுமையாக செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் வரும் 06-08-2017 அன்று கீழக்கரை ஜும்ஆ பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு இந்த வருடம் கீழக்கரையில் இருந்து புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கீழக்கரை மற்றும் வெளியூரில் இருந்து பல மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.