கீழக்கரை ஏர்வாடி தர்ஹாவில் கொடியேற்றம்…

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள பிரசித்தி பெற்ற தர்ஹாவில் இன்று (03-08-2017) கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு  முன்னாள் நீதிபதி மற்றும் தர்ஹா கமிஷனர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.  மாவட்ட டவுன் ஹாஜி சலாஹுதின் துஆ ஓதி தொடங்கி வைத்தார்.  மேலும் ஏர்வாடி தர்ஹாவின் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சமீப காலமாக இது போன்ற நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும், பிற சமுதாய மக்கள் மற்றும் கேரள பகுதி மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தர்ஹா நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.