கீழக்கரை வடக்குத் தெரு அல்-அமீன் அமைப்பு சார்பாக 06-08-2017 அன்று சிறப்பு மழைத் தொழுகை…

கீழக்கரையில் எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியுள்ளது. வசிக்கும் வீடு முதல் தோட்டங்கள் வரை கிணறுகளில் தண்ணீர் வற்றிய நிலையில் உள்ளது. நிலத்தடி நீர் குறைய குறைய ஆள் துளை கிணறுகள் எங்கும் தோண்டப்பட்டு வருகிறது. இந்த வருடமும் பருவ மழை சரியான அளவில் கீழக்கரை வட்டாரத்தில் பெய்யாவிட்டால், ஊர் மிகப் பெரும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும்.

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாக மழை வேண்டி பல இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புகள் சிறப்பு மழைத் தொழுகை நடத்திய வண்ணம் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக பல மார்க்கப் பணிகளை செய்து வரும் வடக்குத் தெருவைச் சார்ந்த அல் அமீன் அமைப்பு வரும் ஞாயிறு (06-08-2017) காலை 07.45 மணியளவில் சிறப்பு மழைத் தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இத்தொழுகை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பள்ளி அருகில் உள்ள ராயல் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கும் தனி இட வசதி ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


புனித ரமலான் வாழ்த்துக்கள்..