மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி போராட்டம் அறிவிப்பு..

மத்தியில் ஆளும் ப.ஜ.க அரசும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசும் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ரேசன் கடைகள் ஒழிப்பு, சமையல் எரிவாயு மானியம் ரத்து, தவறான GST வரி, மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், விவசாயிகள் பிரச்சினை, இது போன்று தொடர்ந்து பல மக்கள் விரோத செயல்பாடுகளை தீவிரமாக சாமானிய மனிதனின் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல் பணக்கார கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் விதம் செயல்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆகஸ்ட் 6, 2017 (ஞாயிற்றுக் கிழமை) அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இப்போராட்டம் பற்றிய மேல் விபரங்களுக்கு கீழே உள்ள ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

1)செல்வி சுதா,மாநில துணைம செயலாளர்
9962000968.

2) திரு.காஜா மைதீன்,
(மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மத்திய சென்னை)
மாநில செய்தி தொடர்பாளர்
9840040016.