கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்..

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் இன்று (02-08-2017) அன்று டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் டெங்கு கொசு உருவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பட விளக்கத்துடன் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டது.

இம்முகாமில் 700கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்நு கொண்டு சிறப்பித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.