மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற 30.08.2017க்குள் விண்ணப்பிக்கலாம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

​மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ​1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிறற்கு ரூ.1000/- 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3000/-ம் மற்றும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4000/-ம், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6000/- உயர்கல்வி (முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, மருத்துவம்) பயிலும் மாணவர்களுக்க ரூ.7000/- ம் வழங்கப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்கள் இதர அரசுத் துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருத்தல் கூடாது. உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் கிடைக்கும். கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் 30.08.2017க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.



புனித ரமலான் வாழ்த்துக்கள்..