கீழக்கரையில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

இன்று (31-07-2017) மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பொது வினியோக முறையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து நடைபெற்றது. கீழக்கரையில் மாலை 05.00 மணியளவில் முஸ்லிம் பஜார் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தலைமையுரையை நிஷா பவுண்டேசன் மாநில தலைவர் சித்திக் வழங்கினார். துவக்க உரையை SFI மாவட்ட செயலாளர் தெட்சணாமூர்த்தி வழங்கினார். மேலும் கோரிக்கையை விளக்கி DYFI நகர செயலாளர் செல்வவிநாயகம் மற்றும் கமல் நற்பணிமன்ற தலைவர் மாரிசாமி ஆகியோர் பேசினர். அதைத் தொடர்ந்து நிறைவுரையை DYFI மாவட்ட செயலாளர் ஆதிரத்தினம் வழங்கினார். நிகழ்வின் இறுதியாக நன்றியுரையை DYFI நகரக்குழு கண்ணண் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.