கீழக்கரை செங்கல்நீரோடை கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் ஒதுங்கியது…

கீழக்கரையில் உள்ள செஙல்நீரோடை பகுதியில் இன்று (31-07-2017) காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று ஒதுங்கியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் பெயருக்கு குளிரூட்டப்பட்ட அறையிருந்தும் எப்பொழுதும் போல் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இராமநாதபுரம் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.