நிரந்தர விடுதலை கிடைக்குமா இந்த சாக்கடையிலிருந்து?..

கீழக்கரை வடக்குத் தெருவில் இருந்து தெற்கு தெரு செல்லும் வழியில் உள்ள இடைபட்ட சாலை கடை தெருவை இணைக்கும் சாலையாகும். இந்த வழியில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனம் தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கும். அதே போல் சாக்கடை நீரும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும்.

சுகாதாரத்தில் அக்கறை கொண்ட சில சகோதரர்கள் தங்களின் முயற்சியால் நகராட்சி ஊழியர்களை வைத்து ஒழுங்குபடுத்துவார்கள், ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் கழுவு நீர் பெருக்கெடுத்து ஒட ஆரம்பித்து விடும். கடந்த வாரமும் சில சகோதரர்களால் முயற்சி மேற்கொண்டு சரி செய்யப்பட்டது( கீழே புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது), ஆனால் இன்று மீண்டும் நீர் தெருக்களில் ஓட ஆரம்பித்து விட்டது.

சாக்கடையால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வெகுவாக பரவி வரும் இந்த வேலையில் இது போன்ற தெருவில் ஓடும் சாக்கடை நீரைக்கட்டுப்படுத்த நகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எடுக்குமா??