இராமநாதபுரத்தில் பயங்கரம்! கூலிப்படையினர் வெறிச்செயல்

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை (28.07.2017) நடை பயிற்சி மேற்கொண்டிருந்த மகாசக்தி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் (த/பெ சன்முகம்) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இந்தப் படுகொலையை கூலிப்படையினர் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கொலையளிகள் சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகம் ஹெலிபேட் அருகில் கால்நடை விந்து உரை வங்கி வளைவு அருகாமையில் நடந்துள்ளது. காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.