சிறப்புக் கட்டுரை….

பேணப்பட வேண்டிய மனுக்கள்..
இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்…
சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்…
துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்…

இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்…

அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது…

இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று விடுகின்றனர்…

ஆனால் இன்னும் சிலருக்கு திருமணத்தின் ஆரம்பம் இனிமைய, பின்னர் அந்த இனிமையே கசப்பையும், ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில் சலிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது…

இன்னும் சில தம்பதிகளுக்கு ஆரம்ப கால கட்டமே கூட சந்தோசத்தை கொடுப்பதில்லை…

இவர்களில் சிலர் தங்களுக்குள்ளேயே பேசி நல்ல ஒரு முடிவெடுத்து சமாதானத்தை மேற்கொண்டு தன் வாழ்க்கையை தொடர்ந்து விடுகின்றனர்…

ஆனால் வேறு சிலரோ ஒருவரையொருவர் பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விடுகின்றனர்…

அவ்வாறு முடிவெடுத்த பிறகு அவர்கள் விவாகரத்து பெறுவதற்காக மார்க்க அடிப்படையில் ஜமாத்தார்களை அடைகிறார்கள்…

இவ்வாறு விவாகரத்திற்கான கடிதங்களை ஜமாத்திற்கு கொடுத்தனுப்பிய பின் முடிவுக்காக கால எல்லையின்றி தம்பதிகள் காத்திருக்கின்றனர்…

இந்த காத்திருப்பு காலவரையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது….

வருடங்கள் பல கடந்தாலும் பிரச்சினைகள் மட்டும் கடப்பதில்லை, முடிவுகளும் எட்டுவதில்லை….

இத்தகைய தாமதிப்புகள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறியாதவர்களில்லை…

அவர்கள் சட்டென்று விவாகரத்து கடிதங்களை ஜமாத்திற்கு கொண்டு வந்திடுவதில்லை…

பல மனக்கசப்புகளிடையே எப்படியும் சேர்ந்து வாழ்ந்து விடலாம் என்று தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவருமோ சில காலம் கண்டிப்பாக போராடி இருப்பார்கள்…

அதற்கான தீர்வு கிடைத்து விடவில்லை எனும் போது தங்கள் குடும்பத்தார்களிடம் தெரிவித்திருப்பார்கள்…

அவர்கள் பல முறை பேசி பேசி, தம்பதியர்களுக்கு பிடிக்கவில்லை எனும் போதும் கூட, குடும்பத்தின் மானம் போய்விடுமே என்று சேர்த்து சேர்த்து விட்டிருப்பார்கள்…

ஆக பல முயற்சிகளின் தோல்வியின் முடிவே,  ஜமாத்தை நாடி வருவது…

பல மாத அவஸ்தைகளையோ, அல்லது பல வருட அவஸ்தைகளையோ கடந்து ஜமாத்தை நாடுவது தீர்வுக்காக, ஆனால் முடிவெடுப்பதின் தாமதம், விவாகரத்தை நாடி வந்தவர்கள் மென் மேலும் மேலும் நொந்து போகிறார்கள்…

தாமத்தினால் ஏற்படும் மனப் புலம்பல்கள், கேட்பவர்களின் எண்ணத்தையும் உருக்கி அவர்கள் மீது இரக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது…

தீர்ப்பு கிடைப்பதில் உண்டாகும் தாமதம், அவர்களின் வாழ்க்கை துணையை ஏற்படுத்திய பெற்றோர்கள் மீது கோபக் கணையாக மாறிவிடுகிறது…

தீர்ப்பின் தாமதம், மனம் புரளவும் காரணமாகிவிடுகிறது….அதை எங்கள் மனம் படபடக்கிறது…

தீர்ப்முன் தாமதம் இளமையையும் சேர்த்து புசித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது …

இது போன்ற நிகழ்வுகளெல்லாம் நிகழ்ந்து விடாமல் நிச்சயம் உங்களால் தடுத்திட இயலும்…

இறைத்தூதரின் வாழ்க்கை நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களுக்கும் முன்மாதிரி என்று பிரசங்கம் செய்யும் உங்களுக்கு நபியவர்களிடம் இதிலிருக்கும் முன்மாதிரி மறந்துவிட்டதா…

இது போன்ற பிரச்சினைகள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொழுதெல்லாம் இவ்வாறு தான் கால தாமதப்படுத்தினார்களா…

நபியவர்களிடம் இது போன்ற விவாகரத்து பிரச்சினைகள் கொண்டு வரப்படும் பொழுது சமாதானம் செய்து வைக்க முற்பட்டு, தம்பதிகள் சமாதானத்திற்கு ஒத்துவரவில்லையானால், கையோடு தலாக் செய்து அனுப்பி வைத்து விடுவார்களே…

இதிலெல்லாம் உங்களுக்கு முன்மாதிரி தெரியவில்லையா…

நீங்கள் தலாக் செய்து கொடுத்த பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கோ அல்லது மறுமணம் செய்வதற்கோ காத்திருப்பு காலம் வேறு இதற்கு பிறகு இருக்கிறதே…

தலாக் செய்து வைப்பதையே இவ்வளவு தாமதப்படுத்தினால் அவர்கள் நிலை என்னவாகும்…

அவர்களை பரிதவிப்புக்கு ஆளாக்காதீர்கள்…

அவர்களின் தீரா மனக்கசப்புக்கு ஒரு காலமும் நீங்கள் காரணமாகி விடாதீர்கள்…

தாமத்தினால் ஏற்படும் விபரீதங்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள்…

கால தாமதமின்றி நீங்கள் செயல்பட வேண்டுமென்பதை புரிய வைப்பதற்கான நோக்கமே இப்பதிவுக்கான காரணம்…

நிச்சயம் இப்பதிவு உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்….

அபூபக்கர் சித்திக்.

————————————————————–