ரயிலில் விற்க்கப்பட்ட சைவ பிரியாணியில் செத்து கிடந்த பல்லி…

சமீபத்தில் மத்திய ரயில் நிலையங்கள் குறித்து தணிக்கை குழு பாராளுமன்றத்தில் சமர்பித்த ஆய்வு அறிக்கையில், ரயிலில் விற்கப்படும் உணவு பொருட்கள் மனிதர்கள் உண்ணுவதற்கு ஏதுவானதாக இல்லை என்கின்ற தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை உறுதி செய்யும் விதமாக பூர்வா  ரயில் எக்ஸ்பிரசில் விற்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜார்கந்தில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற ரயிலில் விற்கப்பட்ட சைவ பிரியாணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனே பயணிகள் ரயில் பெட்டியின் உதவியாளரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயில்வே மந்திரிக்கு டுவீட் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து உணவை சாப்பிட்ட ஒருவரின் உடல் நலம் மிகவும்  பாதிக்கப்பட்டதால் உடனே அவரல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக தணிக்கை குழு 74 ரயில் நிலையங்களிலும், 80 ரயில்களிலும் நடத்தப்பட்ட ஆய்வில், அசுத்தமான நீரில் உணவு தயாரிக்கப்படுகிறது, மேலும் உணவில்  தூசி, ஈக்கள், கரப்பான் பூச்சி மற்றும் எலிகளிடம் இருந்து பாதுகாக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


1 Comment

Leave a Reply

Your email address will not be published.