கீழக்கரை தாலுகாவில் மக்கள் தொடர்புத் திட்டம்…

கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா ரெகுநாதபுரம் குருப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை தாசில்தார் இளங்கோவன் தலைமையில் சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் தமிம்ராஜா முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மண்டல துணை தாசில்தார் நாகராஜ் வரவேற்றார். அவர் உரையாற்றும் பொழுது வேளாண்மை கால்நடை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப்பேசினர். அதைத் தொடர்ந்து சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் பேசும் பொழுது தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் வழங்கப்படும், அதே சமயம் தகுதியற்றறவர்கள் அடையாளம் காணப்பட்டு அரசின் உதவித்தொகைகள் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் கீழக்கரை தாலுகாவில் மூன்று மாதங்களில் 1023 தகுதியற்றவர்கள் இனம் அடையாளம் காணப்பட்டு உதவித் தொகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழக்கரை தாலுகாவில் மட்டும் ஒட்டு மொத்தமாக பிரதி மாதம் பத்து இலட்சத்துக்கு மேல் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான பயனாளிகள் இடைத்தரகர்ரகளை அணுகாமல், நேரடியாக அலுவலத்தை அணுகுமாறும் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில் இரண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ1,03,500/–நிதி உதவிகளும் வழங்கப்பட்டது. விழாவில் திருப்பபுல்லாணி வருவாய் ஆய்வாளர் முனியம்மாள், ரெகுநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்


To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..