கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கலாம் நினைவு தின விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முன்னாள் குடியரசுத்தலைவர் APJ.அப்துல்கலாமின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 26.07.2017 அன்று நினைவு தின சிறப்பு விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வரவேற்புரை வழங்கினார்கள். சிறப்ப விருந்தினராக கலந்து கொண்ட ரைப்பட நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்தி, பெண் சுதந்திரம் பொறுப்புணர்வு, சுய மரியாதை, பாதுகாப்பு, தனிப்பட்ட திறமைகள், சுகாதாரமான மனநிலை பற்றியும் மாணவிகள் கேட்ட வினாக்களுக்கும் பதில் உரைத்தார்.

அதைத் தொடர்ந்து முகம்மது சகீல் அக்தார் ஐ.பி.எஸ் தோல்வியே வெற்றியின் ஏணிப்படிகள் என்ற பழமொழிக்கேற்ப வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள் குறிக்கோள்கள் பற்றியும், கலாம் கொள்கைகளை பின்பற்றி நடப்பது பற்றியும் கூறினார்.

கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அறிவியல் சோலை என்னும் தலைப்பில் மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த சந்கேங்கள் பற்றியும், அறிவியல் சார்ந்த ஆற்றல்களை ஊக்கப்படுத்துவது பற்றியும், அறிவியல் சோலை கண்டுபிடிப்பு மையம், பெங்களுர் ஆய்வு மாணவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

பின்னர் கே. அப்துல் கனி , சமூக ஆர்வலர் கிரீன் மேன் ஆ.ஃப் இந்தியா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவுத் கான் செய்திருந்தார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.