கீழக்கரையில் ஒருங்கிணைந்து மழைத் தொழுகை நடத்த மும்முரம்..

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மக்கள் டீம் சோசியல் சர்வீஸ் அமைப்பைச் சார்ந்த காதர், கீழக்கரையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மற்றும் மழையின்மையை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமுதாய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கீழக்கரை மக்கள் முன்பு சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாகவும் வைத்தார். அவரின் கோரிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று (25-07-2017) கீழக்கரை தெற்கு தெரு பொதுநல சங்கத்தில் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழக்கரை முன்னாள் நகர்மன்ற தலைவர், மழைத் தொழுகையை நடத்தும் நிகழ்வுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைத்து ஜமாத் நிர்வாகம் மற்றும் அனைத்து சமூக நல அமைப்புகளுக்கும் அழைப்பு விடுப்பது என்று என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் மழைத்தொழுகை வரும் 30ம் தேதி காலை 07.30 மணியளவில் மக்தூமியா பள்ளி வளாகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த சிறப்பு மழைத் தொழுகையை மன்சூர் ஆலிம் நூரி கத்தீப் தொழ வைப்பார் என்றும், அத்தொழுகைக்கான சிறப்பு பிரசங்கத்தை ACD.ஆசிப் நடத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

1 Comment

  1. நல்ல முயற்ச்சி, தொடரட்டும்.

    யா அல்லாஹ் இனி வரும் காலங்களில் கீழக்கரை செழிப்புடனும், தண்ணீர் பஞ்சம் இல்லாமலும் இருக்க செய்வாயாக, ஆமீன்.

Comments are closed.