வாகன விதிகளை மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை..

இராமநாதபுர மாவட்டத்தில் பல முக்கிய நகராட்சிகள் உள்ளன. ஆகையால் காலையில் தொடங்கி மாலை வரை இராமநாதபுரம் மட்டும் அல்லாது அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக காணப்படும். இதற்கு இரண்டு காரணங்கள் அதில் முக்கியமான ஒன்று ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது, மற்றொன்று போக்குவரத்து காவல் துறையில் போதிய காவலர்கள் இல்லாதது. இதில் விதிகளை மதிக்காதவர்களை கட்டுப்படுத்தினாலே அதிக பட்ச விபத்துக்களையும், நெரிசல்களையும் குறைக்க முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு கீழக்கரை தெற்கு தெரு முன்னாள் நகராட்சி உறுப்பினர் லாஹிதுகான், வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். அதில் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ள வாகனங்கள், வழிகாட்டும் விளக்குகள் இல்லாமல் வண்டியை ஓட்டுவதாலே விபத்துகள் அதிகமாக காரணம் என்றும், அவ்வாறு விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கடந்த வாரம் கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் இணைந்து கீழக்கரையில் உள்ள சாலைகளை முறைப்படுத்தவும், சாத்தியமுள்ள சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்ற கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


1 Comment

  1. வாகன எண்ணிக்கை அதிகரித்த இந்தக் காலகட்டத்தில் நமது கீழை நகருக்குள் முக்கிய வீதிகள் மட்டுமல்லாது தெருக்களுக்குள் உள்ள வீதிகளிலும் ஒருவழிப்பாதை அமைப்பதென்பது மிக மிக அவசியமே.

Comments are closed.