கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி..

கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ​அப்துல் கலாம் 2வது நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவியர் தாசிம் பீவி மகளிர் கல்லூரி மாணவியருடன் இணைந்து அப்துல் கலாம் அவர்களின் முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

மேலும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை கலை மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் 21/07/2017 வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சிறந்த படைப்புகளை செய்த மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டது.