பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் தமிழிலும் ஒலிக்கும்…

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாட வேண்டும். அதேபோல் தொழிற்சாலைகள்,  அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் மாதம் ஒரு முறை பாட வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு சார்ந்த இனையதளத்திலும், சமூக வலை தளத்திலும் வந்தே மாதரம் பாடல் வரிகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து பதிவிட வேண்டும் என்று நீதிபதி முரளிதரன் அறிவுறுத்தியுள்ளார்.

வந்தே மாதரத்தை வங்க மொழியில் அல்லது சம்ஸ்கிருத மொழியில் பாட இயலாதவர்களுக்கு ஏதுவாக தமிழில் பாட அதை மொழி பெயர்க்கவும் நீதிபதி கூறிவுள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடி தன் உயிரையும், குடும்பத்தையும் இழந்த தியாகிகளை வந்தே மாதரம் பாடல் மூலம் நினைவு கூறும் போது தேசப்பற்று வளர வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பணிக்காக நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வந்தேமாதரம் முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டது என்ற சரியான பதிலுக்கு மதிப்பெண் வழங்காத காரணத்தால், ஆசிரியர் தேர்வு மையம் மீது ஒருவர் தொடுக்கப்பட்ட வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வந்தேமாதரம் பாடலை பாடுவது தனி நபர் விருப்பம் அதை யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.