ரோட்டோரத்தில் நின்று டயர் மாற்றிய கிளீனர் மீது வாகனம் மோதி மரணம்…

கீழக்கரை பகுதிக்கு கடந்த பல வருடங்களாக லாரியில் குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் சுகன்யா தனியார் குடிநீர் வினியோக நிறுவனம். இன்று (25-07-2017) காலை பழுதடைந்த லாரி சக்கரத்தை மாற்றுவதற்காக ஓரமாக நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மறு பகுதியில் இருந்து வந்த சரக்கு லாரி பணி செய்து கொண்டிருந்த கிளீனர் மேல் மோதியது.  இவர் கீழக்கரை ஆழ்வார்குட்டத்தை சார்ந்த ராஜு, வயது 28 ஆவார். அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்த கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலமாக உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.