ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டி..

இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் மாதம் நெருங்க இன்னும் 6 வாரங்களே உள்ளன. இஸ்லாம் சமுதாய மக்கள் வாழ்நாளின் இந்த முக்கிய கடமையை நிறைவேற்ற எதிர்பார்த்த வண்ணம் பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள்.

தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி, “புனித பயணங்கள்” என்ற பெயரில் எளிய நடையில் ஹஜ் புனித பயணத்தின் செயல்முறைகளை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இப்புத்தகத்தை முனைவர். ஹுசைன் பாட்ஷா தொகுத்துள்ளார்கள். இப்புத்தகம் பல முன்னனி மார்க்க எழுத்தாளர்களின் மூலப்புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இப்புத்தக வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ம் தேதி, புதன் கிழமை, மாலை 4.00 மணியளவில் சென்னை எழும்பூர் கேட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த வெளியீடு நிகழ்ச்சி ரய்யான் ஹஜ் & உம்ரா நிறுவனம் சார்பாக நடைபெற உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.