இருட்டில் மூழ்கி கிடக்கும் தெற்கு தெரு ஜாமி ஆ நகர் வழி பகுதி..

கீழக்கரை முக்கிய வீதியும் ஆள் நடமாட்டமும் அதிகமாகி வரும் பகுதி தெற்குத் தெரு மற்றும் ஜாமி ஆ நகரில் இருந்து வரும் நடைபாதை பகுதியாகும். ஆனால் பல நாட்களாக சாலையோர மின்கம்பத்தில் விளக்கு எரியாமல் மக்கள் அவதிப்படுவது இதுவரை யார் கண்ணிலும் படாமல் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக உள்ளது.

இப்பகுதியை கடக்கும் பொழுது மக்கள் மனதில் ஒரு வித பயத்துடனே இருட்டில் நடந்து செல்கிறார்கள். இப்பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தொழுகை பள்ளியின் உள்ள விளக்கு மட்டுமே தற்சமயம் நடந்து செல்பவர்களுக்கு வழி காட்டும் ஒளி தரும் விளக்காக இருக்கிறது. என்று கீழக்கரை நகராட்சியின் ஞான விளக்கு எரியப்போகிறது என்று தெரியவில்லை??