தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் அப்துல் கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (21.07.2017) காலை நினைவு தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் எஸ். சுமையா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நசீமா மரைக்காயர் நிறுவுனர், தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேஷன், சிறப்புரையாற்றினார். கலாம் சிறுவயது நினைவுகள் பற்றியும், பெண்கல்வி முன்னேற்றம் பற்றியும் கூறினார்கள். டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை, இயக்குநர், விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் பெங்களுர் சிறப்புரையாற்றினார். கலாமுடன் இருந்த நினைவுகள் பற்றியும், செயற்கைக்கோள் பற்றிய செய்திகளைக் கூறியதோடு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். டாக்டர் வெங்கடேஸ் சர்மா, துணை இயக்குநர், விண்வெளி ஆராயச்சிக் கழகம் பெங்களுர் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட இரண்டாம் ஆண்டு மாணவிகள் டாக்டர் கலாம் அவர்களின் முக உறையை அணிந்து கீழக்கரை நகருக்குள் பேரணி அணிவகுப்பு செய்தார்கள். இப்பேரணியை டாக்டர் நசீமா மரைக்காயர் அவர்கள் துவங்கி வைத்தார். கே. அஸ்வினி உதவிப்பேராசிரியை நுண்ணுயிரியல் துறை அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொது மேலாளர் சேக்தாவூத்கான், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளும் அலுவலகப் பணியாளர்களும் செய்திருநத்னர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..